மகனுடன் விக்ரம் இணையும் படத்தின் பெயர் இதுதான்? கசிந்தது தகவல்!

புதன், 17 ஜூன் 2020 (14:27 IST)
விக்ரம் தன் மகன் துருவ்வுடன் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம்மின் 60 ஆவது திரைப்படத்தில் அவருடன் அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் இயக்கும் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அதில் படத்தின் பெயர் எதுவும் குறிப்பிடப்படாமல்’ சியான் 60’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படத்துக்கு திறவுகோல் மந்திரவாதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இப்போது சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பெயரை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. விக்ரம்மின் விக்கிபீடியா பக்கத்தில் இந்த பெயர் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகுதான் இந்த தகவல் பகிரப்பட்டு வருகிறது.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்