கோப்ரா திரைப்படம் எந்த ஓடிடியில் ரிலீஸ்? எப்போது?... வெளியான தகவல்!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (09:23 IST)
கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வி படமானது.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’  திரைப்படம் வரும் 31-ஆம் தேதி ரிலீஸான நிலையில் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்த நிலையில் 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரும் பொருட்செலவில் உருவான கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் தோல்விப் படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 20 அல்லது 23 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்