ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!

Siva
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (09:27 IST)
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து  நெட்டிசன்கள் ரியாக்சன் செய்து வருகின்றனர்.
 
இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பண்டிகைக்கு தவறாமல் வாழ்த்து சொல்லும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லவில்லை என சர்ச்சை கிளம்பியது. இது குறித்து ஆவேசமாக சிலர் கருத்து தெரிவித்த நிலையில் ஆயுத பூஜைக்கு அவர் வாழ்த்து சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் சற்று முன் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும் பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்ற விமர்சனம் காரணமாகத்தான் அவர் ஆயுதபூஜைக்கு வாழ்த்து சொல்லி உள்ளதாக பலர் தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்