குறிப்பாக நேற்று எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு பொதுமக்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டது என்றும் சாலைகளிலும் பொதுமக்கள் அதிகம் காணப்படவில்லை என்றும் வாகனங்களும் குறைவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றை விட இன்று சென்னையின் தெருக்கள் மிகவும் வெறிச்சோடி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து 2,100 பேருந்துகள் பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில், கூடுதலாக 2,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் பயணம் செய்ய கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதேபோல் ரயில் நிலையங்களிலும் ஏராளமான பொதுமக்கள் இருந்தனர். ரயில் நிலையம், பேருந்து நிலையம் செல்வதற்காக மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றிலும் கூட்டம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.