விஜய்-விஜய்சேதுபதி-மகேஷ்பாபு-விக்ரம்: புதுமையான கூட்டணி

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (22:50 IST)
ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்குவதற்கு யோசிப்பதை விட அந்த படத்தை புரமோஷன் செய்வதற்கு பத்து மடங்கும் திரையுலகினர் யோசித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதுமையான முறையில் ஒரு திரைப்படம் வெளியாகும்போது இன்னொரு படத்தின் டிரைலர் அல்லது டீசர் அந்த படத்தின் இடைவேளையின்போது திரையிடப்படும் புரமோஷன் அதிகரித்து வருகிறது. இதற்கு பெரிய நடிகர்களும் விதிவிலக்கல்ல.



 
 
இந்த நிலையில் மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர்' படத்தின் இடைவேளையில் விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளன என்ற செய்தி ஏற்கனவே தெரிந்ததே
 
அதேபோல் விஜய்யின் 'மெர்சல்' தீபாவளி அன்று திரைக்கு வரும் திரையரங்குகளில் விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படத்தின் டீசர் திரையிடப்பட தற்போது திட்டமிட்டுள்ளது. விஜய், விக்ரம், விஜய்சேதுபதி, மகேஷ்பாபு போன்ற பெரிய நடிகர்களே புதுமையான கூட்டணி அமைத்து திரையரங்குகளில் டீசரை திரையிடும்போது சின்ன படங்களும் அதே முறையை கடைபிடிக்க முடிவு செய்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்