செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (15:02 IST)
மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்சேதுபதி இணைந்துள்ளார்.

 
 
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதிராவ், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கும் திரைப்படமான 'செக்க சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. 
 
பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஸ்ட்ரைக் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்