சிபிராஜ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஷூட்டிங், அவருடைய சொந்த ஊரான கோயம்புத்தூரில் நடைபெற இருக்கிறது.
‘மதுபானக்கடை’ படத்தை இயக்கியவர கமலக்கண்ணன் வருடங்களுக்குப் பிறகு அவர் தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ஆக்ஷன் கலந்த காதல் படமாக இது உருவாகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங், கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர், சிபிராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.