அன்று விமான நிலையத்தில் நடந்தது என்ன? விஜய் சேதுபதி தரப்பு விளக்கம்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (11:04 IST)
விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார். அப்போது விமான நிலையத்திற்கு சென்ற போது, அங்கு நடிகர் விஜய்சேதுபதியை ஒரு நபர் வந்து உதைத்ததாகக் கூறப்பட்டது. இது அங்குள்ளவர்களால் வீடியோவகப் பதிவு செய்யப்பட்டதால் உடனே இணையதளத்தில் வைரல் ஆனது.
 
இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல் கொடுத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
தாக்கிய நபர் குடிபோதையில் இருந்தார். அவர் மாஸ்க் அணிந்திருந்ததால் அது வெளியே தெரியவில்லை. செல்போனில் ஒருவர் வீடியோ எடுத்த விவகாரம் ஊதி பெரிதாக்கப்பட்டது.  தாக்கிய நபரை காவல் நிலையம் அழைத்துப் போய் அப்போதே பிரச்சனை தீர்க்கப்பட்டது. 
 
நான் பாதுகாவலர்களுடன் பயணம் செய்வதில்லை. என்னுடைய நெருங்கிய நண்பரைத்தான் அழைத்துச் சென்றேன். பாதுகாவலர்களை வைத்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்