லோகேஷ் படத்தில் விஜய் சேதுபதி…. ரெய்ன் ஆன் பிலிம்ஸின் முதல் படம்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:54 IST)
இயக்குனர்கள் பலர் ஒன்று சேர்ந்து ரைன் ஆன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தலைமையில் பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், இயக்குனர் சசி உள்ளிட்ட பல இயக்குனர்கள் இணைந்து ரைன் ஆன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த படம் இப்போது அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்