திண்டுக்கல் மாவட்டம் மேங்கில்ஸ்ரோடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிவகாமி நாதன் என்பவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவரின் குழந்தையான ஆஷிவ் அதர்வா தன்னுடைய அறைக்கதவை உள்பக்கமாக சாத்தி தவறுதலாக பூட்டிக் கொண்டுள்ளார். கதவில் ஆட்டோமெட்டிக் பூட்டு இருந்ததால் வெளிப்பக்கத்தில் இருந்து திறக்க முடியவில்லை. இதனால் குழந்தை அழ ஆரம்பித்துள்ளது.