விஜய் சேதுபதி பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (17:17 IST)
கவுதம் வாசுதேவ், விஜய், வெங்கட் பிரபு, நலம் குமாரசாமி ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆந்தாலஜியான ‘’குட்டி ஸ்டோரி’’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளிவிட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்சேதுபதி , இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பங்களிப்பில் சுமார் 4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகுயுள்ள படம் ’’குட்டி ஸ்டோரி’’. இப்படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியானது.

பிரபல இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ், நலன் குமாரசாமி, விஜய், வெங்கட் பிரபு ஆகிய இயக்குநர்களின் 4 கதைகளைக்கொண்ட படம் குட்டி ஸ்டோரியாக உருவாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க காதலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தை ஹிட் பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதக இப்படத்தின் தயாரிப்பாலர் ஐசரி கணேஷ் த்னது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்