அமீர்கானுக்கே டஃப் குடுப்போம்; உடல் எடையை குறைக்கும் விஜய் சேதுபதி!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (09:47 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் சேதுபதி இந்தி படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் 1994ல் வெளியான படம் “பாரஸ்ட் கம்ப்”. ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். “லால் சிங் சத்தா” என்ற இந்த படத்தில் டாம் ஹான்க்ஸ் கதாப்பாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடிக்கிறார்.

இந்த படத்தில் முக்கியமான மற்றொரு கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் முதல் இந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக அமீர்கான் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து வருகிறார். இந்நிலையில் அமீர்கானுக்கு இணையாக விஜய் சேதுபதியும் உடல் எடையை குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்