விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (17:42 IST)
விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக எந்த படங்களின் புரமோஷனும் வெளிவராத நிலையில் தற்போது ஒவ்வொரு படங்களின் புரமோஷன்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சற்று முன்னர் ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ படத்தின் டிரைலர் வெளியான நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்றான க/பெ ரணசிங்கம்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்வெளியாகியுள்ளது 
 
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, பவானிஸ்ரீ, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராகவும், சண்முகம் முத்துசாமி வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தை குணசித்திர நடிகர் பெரிய கருப்புத்தேவர் மகன் விருமாண்டி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்