அஜித்திற்கு பின்னர் விஜய் சேதுபதிதான்...

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (20:47 IST)
கோலிவுட்டில் தனது படங்களுக்கு நல்ல ஓபனிங் கொடுக்கும் ஹீரோக்களில் அஜித்தும் ஒருவர். இவருக்கென் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. 

 
இந்நிலையில், அஜித் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது ரசிகர் மன்றங்களை கலைத்து, தனது பெயரில் நற்பணி மன்றங்களை துவங்கி ரசிகர் மூலம் உதவிகளை செய்து வருகிறார்.
 
தான் செய்யும் உதவியை பிறருக்கு தெரியப்படுத்தாமல் இருப்பவர் அஜித். ஆனால், பல சமயங்களில் அஜித் செய்யும் உதவி வெளிப்படையாக தெரிந்துவிடுகிறது. 
 
தற்போது அஜித் வழியில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு நாடக்கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தி தங்க நாணயம் வழங்கினார்.
 
சமீபத்தில், அரியலூர் மாவட்ட மாணவர்களுக்கு படிப்பிற்காக உதவித்தொகை வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் நடிகர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கும், வயதான நடிகர்களுக்கும் உதவி செய்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்