சசிகலாவின் குடும்பத்தை குறிவைத்து நடந்த மெகா ரெய்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி உதவியாளர் பூங்குன்றம் வீடும் தப்பவில்லை. ரெய்டின் போது இவர் அளித்த தகவல் அப்படியே டெல்லிக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது போயஸ் கார்டன் வட்டாரத்தில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் அவரது உதவியாளர் பூங்குன்றன். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் இருந்த இடமே தெரியவில்லை. அதன் பின்னர் சசிகலா பரோலில் வந்தபோது மட்டும் அவரை சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வந்தார்.
வருமான வரித்துறை இவரது வீட்டில் நடத்திய சோதனையில் எந்த ஆவணத்தையும் கைப்பற்றவில்லை. மாறாக பூங்குன்றனிடம் நடத்திய விசாரணையில் அவர் சொன்ன தகவல்களை அப்படியே டெல்லிக்கு சொல்லியிருக்கிறார்கள் வருமான வரித்துறையினர்.
என் பெயரில் சில சொத்துக்கள் இருந்தது உண்மைதான். ஆனால் அம்மாவின் மறைவுக்குப் பின்னர் எல்லாவற்றையும் விவேக் தம்பி கேட்டாரு, நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டேன். இப்போ என் பெயரில் எந்த சொத்தும் இல்லை.
சின்னம்மா பரோலில் வந்தபோது கூட சில ஆவணங்களில் கையெழுத்துக் கேட்டாங்க. போட்டுட்டுதான் வந்தேன் என பூங்குன்றன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். இந்த தகவல் அப்படியே டெல்லிக்கு பறந்திருக்கிறது வருமான வரித்துறை மூலம்.