தனது நடிப்புக்கு பயிற்சியாளர்களை நியமித்த விஜய் சேதுபதி!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (15:50 IST)
விஜய் சேதுபதி தனது நடிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக இரண்டு நடிப்பு பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி தற்போது தமிழ் மொழி தாண்டியும் இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழிலும் அவர் வில்லனாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் தோல்வி அடைந்து வருகின்றன.

இந்நிலையில் இனிமேல் தனது படங்களில் அதிக கவனம் செலுத்த விரும்பும் விஜய் சேதுபதி, தன்னுடைய நடிப்பை மெருகேற்றும் விதமாக இரண்டு நடிப்புப் பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அறிவுரையின் பேரில்தான் ஒவ்வொரு படத்துக்கும் நடிப்பை வித்தியாசப்படுத்திக் காட்டி நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்