பனையூர் இல்லத்தில் விஜய் ரகசிய ஆலோசனை: பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (11:53 IST)
மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சென்னை பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல். 
 
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் பெயரில் அரசியல் கட்சியை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ளார். இது கடந்த வாரத்தில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய், சென்னை பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தவிருப்பதாக தெரியவந்துள்ளது. 
 
இந்த ஆலோசனையில் விஜய் மக்கள் இயக்கம் மாநில பொருப்பாளர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய இடம் வகிப்பவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆலோசனை நடக்கும் கூட்டத்திற்கு செல்போன்கள் அனுமதி இல்லை என்றும் இந்த ஆலோசனை ரகசிய ஆலோசனையாக நடைபெறும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. 
 
மேலும், அரசியல் கள நிலவரம், எதிர்கால திட்டமிடல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்