இந்நிலையில், ரஜினியின் அறிக்கை வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி ஆன்மீகத்தில் ஈடுபட்டால் அவருக்கு இன்னும் 16 ஆண்டுகள் ஆயுள் விருத்தியாகும் எனக் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் ஜோதிடர் சாந்தகுமார் கணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
நடிகர் ரஜினிகாந்த்துக்கு வரும் டிசம்பர் மாதத்திலிருந்து மூன்றாண்டுகளுக்கு எந்த அரசியல் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. எனவே இதிலிருந்து விடுபட அவர் வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுத்து ஆன்மீகப் பணியில் ஈடுபடலாம்… ஏற்கனவே கடந்த 2010 ஆண்டில் ஒரு கண்டத்தைத் தாண்டிய ரஜினிக்கு இந்த 2020 வருடம் கவனத்துடன் இருக்க வேண்டும்… அவர் வீட்டிலிருந்து ஆன்மீகத்தை மேற்கொண்டால் அவருக்கு 16 ஆண்டுகள் ஆயுள் கெட்டிப்படும் எனத் தெரிவித்துள்ளார்.