சுல்தான் தியேட்டரில் ரிலீஸாக அவர்தான் காரணம்தான்! எஸ் ஆர் பிரபு ஓபன் டாக்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (15:14 IST)
சுல்தான் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாக விஜய்தான் காரணம் என தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கூறியுள்ளார்.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்ய உள்ளாராம் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. 

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா இன்று வெளியானது. அப்போது பேசிய தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ‘முதலில் இந்த படத்தை ஓடிடியில்தான் ரிலீஸ் செய்வதாக இருந்தேன். ஆனால் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தின் வரவேற்புதான் என்னை தியேட்டரில் ரிலீஸ் செய்யக் காரணமாக அமைந்தது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்