விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு தடை: அதிரடி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (08:05 IST)
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது
 
இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் குவைத் அரசு திடீரென பீஸ்ட் படத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை ஆகிய காட்சிகள் இருப்பதால் தடை செய்வதாக குவைத் அரசு விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர், துல்கர் சல்மான் நடித்த குரூப் ஆகிய திரைப்படங்கள் குவைத்தில் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்