விஜய் ஆண்டனியின் பாட்டு : ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸ்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (16:37 IST)
விஜய் ஆண்டனி நடித்துவரும் ‘காளி’ படத்தில் இருந்து ஒரு பாடல் ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. இந்தப் படத்தில் அஞ்சலி, ஸ்ம்ருதி வெங்கட், ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என 4 ஹீரோயின்கள் நடித்துவருகின்றனர். இதில், அஞ்சலியின் போர்ஷன் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.
 
விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன், படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார். யோகி பாபு, மதுசூதன், ஆர்.கே.சுரேஷ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் முதல் பாடல், ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்