நேற்று ரிலீஸான படங்களில் பெரிய நடிகர்கள் படம் என்ற அடையாளத்தோடு ரிலீஸ் ஆகின விஜய் ஆண்டனியின் ரத்தம் மற்றும் த்ரிஷாவின் தி ரோட் ஆகிய திரைப்படங்கள். ஆனால் இரண்டு படங்களுமே ரசிகர்களைப் பெரியளவில் கவரவில்லை.
தமிழ்படம் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் சி எஸ் அமுதன். இப்போது அவர் தன்னுடைய ரூட்டை மாற்றி ரத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடிக்க ரித்திகா, நந்திதா உள்ளிட்டோர் மற்ற வேடங்களில் நடித்திருந்தனர்.
ஒரு கொலையை பின்தொடர்ந்து செல்லும் ஜர்னலிஸ்ட்டின் கதை என்ற சுவாரஸ்யமான கதையாக இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பியதால் இந்த படம் ரசிகர்களைக் கவரவில்லை. அதே போல த்ரிஷாவின் தி ரோட் திரைப்படமும் போதைப் பொருள் மாஃபியா பற்றிய ஒரு கதை என்றாலும், அதிலும் திரைக்கதை சுமாருக்குக் கீழே அமைந்ததால் ரசிகர்கள் அந்த படத்தையும் கேலி செய்ய தொடங்கியுள்ளனர்.