விஜய் ஆண்டனி தன் அடுத்த படமான ரோமியோவில் ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின்னர், அண்ணாத்துரை, திமிரு பிடிச்சவன், பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்து, இயக்கி, தயாரித்திருந்த பிச்சைக்காரன் 2 படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்று வசூலும் குவித்து. இதையடுத்து ரிலீஸான கொலை படமும் கலவையான விமர்சனங்கள் பெற்றது.
இந்த நிலையில், இவரது அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, இவர் சீரியஸான படங்களில் மட்டும் நடிப்பதாகக் கூறி இனிமேல் ரொமாண்டிக் படங்களில் நடிக்கும்படி செய்தியாளர்களும், ரசிகர்களும் அவரிடம் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி அவரது அடுத்த படமான ரோமியோவில் அவர் ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ''என்னை romantic hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது ROMEO''.... என்று பதிவிட்டு, வரும் 2024 ஆம் ஆண்டு சம்மரில் இப்படம் ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளார்.
என்னை romantic hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி