பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் நவாசுதீன் சித்திக். இவர், படாங் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர், பிளாக்வெள்ளி, கேங்ஸ் ஆப் வாஸ்யெப்பூர், ராமன் ராகவ் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
வித்தியாசமான படங்கள், கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும் நவாசுதீன் சித்திக், தற்போது ஒரு படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி வரும் 'ஹத்தி' என்ற படத்தில், அவர் திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரது போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், கையில் கத்தியுடன் உட்கார்ந்திருக்கிறார். இப்படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகிறது.