''தனித்துப் போட்டியிட திமுக தயாரா?'' முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்

சனி, 31 டிசம்பர் 2022 (17:58 IST)
கூட்டணி இல்லாமல்  தனித்துப் போட்டியிட திமுக தயாரா? என்று  திமுக தலைவரும் முதல்வருமான  ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து திமுக மீதும் திமுக அரசு மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைத்து வரும் நிலையில், ‘’தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டால் பாஜக ஒரு தொகுதியில் கூட  வெற்றிபெறாது.  அதிமுகவை அச்சுறுத்தி அதில் பாஜக குளிர்காய்கிறது’’ என்று  முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதில் அளித்துள்ளார்.

அதில்,’’1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது  அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாக.

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே. யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் திரு  முக ஸ்டாலின் . துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது.

மாண்புமிகு பாரத பிரதமர் திரு   மோடி அவர்கள் தலைமையில்,  பாஜக  2024 ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும். கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது.

நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் திரு  முக ஸ்டாலின் கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? என்று தெரிவித்துள்ளர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்