விஜய் 68 படத்தில் இணையும் இரு பிரபல நடிகர்கள்?

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:32 IST)
விஜய்  லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் இரு முக்கிய வேடங்களில் மாதவன் மற்றும் பிரபுதேவா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்