விஜய்யின் அடுத்த படத்தில் இணையும் இரண்டு 90ஸ் சூப்பர் ஸ்டார் நடிகர்கள்!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (17:01 IST)
நடிகர் விஜய், லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்த படத்தில் விஜய்யை தவிர நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய எந்த விவரமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் இணையத்தில் பிரியங்கா மோகன், சினேகா, ஜெய் உள்ளிட்டவர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

அந்த வகையில் இப்போது இந்த படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்