விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (15:59 IST)
தமிழ்படம் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் சி எஸ் அமுதன். இப்போது அவர் தன்னுடைய ரூட்டை மாற்றி  ரத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.  

முந்தைய படங்களைப் போல இல்லாமல், சீரியஸான ஒரு பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் சி எஸ் அமுதன். இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்