நீ என்ன சிங்களவனா?.. இல்ல.. கிரிக்கெட்டர்! – முரளிதரனின் '800' பட ட்ரெய்லர்!

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (15:37 IST)
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் ‘800’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இந்த படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து விஜய் சேதுபதி, அந்த படத்தில் இருந்து விலகினார்.

அதையடுத்து தற்போது ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல் இந்த படத்தில் முரளிதரன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்து முடிந்தது. படத்தில் முக்கிய வேடத்தில் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ் ஆகியோர் நடிக்க இயக்குனர் ஸ்ரீபதி இயக்கியுள்ளார்.  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்த  நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

அதில், ‘’முரளிதரன் கிரிக்கெட்டில் சேர்ந்தது....அவர் சர்வதேச போட்டியில் இலங்கை சார்பில் களமிறங்கி, ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே போட்டியில்  ஏற்பட்ட சர்ச்சை, அதிலிருந்து அவர் மீண்டு வந்து கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி, சுழற்பந்து வீச்சு வீரராக வெற்றிகரமான ஜொலித்தது. ஆகிய சம்பவங்கள்’’ இதில் இடம்பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தைப் பார்க்க, சினிமா ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வமுடன் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்