தளபதி 65 பட ரிலீஸ் தள்ளிப்போகும் வாய்ப்பு… அதனால் கமல் எடுத்த முடிவு!

Webdunia
புதன், 19 மே 2021 (16:45 IST)
விஜய்யின் 65 ஆவது படத்தின் ரிலீஸ் பொங்கலில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி 65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரம்மாண்டமான ஸ்டூடியோ ஒன்றில் மால் செட் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் கொரோனா காரணமாக அந்த பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் ரிலீஸ் பொங்கலில் இருந்து அடுத்த ஆண்டு சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலிசுக்கு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் பொங்கல் ரிலீஸ் ரேஸில் கமலின் விக்ரம் படக்குழுவினர் துண்டுபோட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்