கமல்ஹாசன் படத்தில் இணைந்த விஜய் பட கலைஞர் !

செவ்வாய், 18 மே 2021 (22:42 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில்  சில கலைஞர்கள் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியகிறது.

தேர்தலுக்கு முன்னமே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனற ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் கோவையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவதால் பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால் அடுத்து விக்ரம் என்ற படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகர் ஃப்கத்பாசில் கமலுக்கு வில்லனாக
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால செய்திகள் வெளியானது.

 
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக அனைவரிடமும் பாராட்டுகள் பெற்ற நிலையில் இப்படத்தில் மிகச்சிறந்த கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீண்டகாலம் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இப்பபடத்தை ஹிட் ஆக வேண்டுமென லோகேஷ் படக்குழுவினர் தீர்மானித்துள்ளதால் படம் பிரமாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது. மேலும், விஜய் சேதுபதி ரசிகர்கள் இந்தச் செய்தியை வைரலாக்கினர்.

இந்நிலையில், லோகேஷின் மாநகரம்,கைதி, மாஸ்டர் ஆகிய 3 படங்களுக்கும் சத்ய சூரியன் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி நிலையில். கமல்ஹசானின் விக்ரம் படத்தில் அவருக்குப் பதிலாக சர்க்கார் படத்தில் பணியாற்றிய கிரிஸ் கங்காதரன் இப்படத்தில் ஒளிப்பதிவராக இணைந்துள்ளதாகத்ப் தகவல் வெளியாகிறது. அதேபோல் முந்தைய படங்களில் எடிட்டராக பணியாற்றிய பிலாமின் ராஜுக்குப் பதில் வேறொருவர் பணியாற்றுவார் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்