விவேக் மரணத்துக்கு விஜய் படக்குழுவினர் செய்த அஞ்சலி!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (08:04 IST)
நடிகர் விஜய் விவேக்கின் மரணம் குறித்து எந்த வித அஞ்சலியும் செலுத்தவில்லை என்று சர்ச்சைகள் எழுந்த நிலையில் இப்போது ஒரு உணர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளன.

நடிகர் விவேக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு நேரில் வந்து அஞ்சலில் செலுத்தினர். ஆனால் விஜய் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்ற நிலையில் அவரால் நேரில் வரமுடியவில்லை.  ஆனால் சமூகவலைதளம் மூலமாக கூட அவர் அஞ்சலி செலுத்தவில்லை என சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால் அப்படி இல்லாமல் விவேக் மரண செய்தி அறிந்த பின்னர் உடனடியாக படப்பிடிப்பை அன்றைய நாள் முழுவதும் நிறுத்தியுள்ளனர் படக்குழுவினர். விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்