அமெரிக்காவில் தற்போது 42 சதவீத பொதுமக்கள் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் அவர்களில் 30 சதவீதம் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முழு அளவில் எடுத்துக் கொண்ட 30 சதவீதத்தினர் மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது
அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் முழு அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மாஸ்க் அணியாமல் எங்கு வேண்டுமானாலும் வெளியே செல்லலாம் என்றும் அவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது