பாகுபலி, கபாலி போன்ற திரைப்படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் 60வது படத்தின் உரிமம் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
தெறி படத்தை அடுத்து விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்துள்ள நிலையில் இன்னும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. தற்போதைக்கு ’விஜய் 60’ என்று கூறுகிறார்கள்.
விஜய் 60 படத்தின் கேரளா தியேட்டர்கள் வெளியீட்டு உரிமையை ஐஎப்ஏஆர் என்ற நிறுவனம் ரூ.6.25 கோடிக்கு வாங்கியுள்ளது. கேரளாவில் முதல் முறையாக விஜய்யின் படம் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போயுள்ளது.
முன்னதாக ரஜினிகாந்தின் கபாலி படத்தின் கேரளா தியேட்டர்கள் வெளியீட்டு உரிமை ரூ.7.5 கோடிக்கும், பாகுபலி 2 படத்தின் உரிமை ரூ.10.5 கோடிக்கும் போனது.
கேரளாவில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள். விஜய்யின் தெறி படத்தின் கேரளா தியேட்டர்கள் வெளியீட்டு உரிமை ரூ.5.6 கோடிக்கு விலை போனது குறிப்பிடதக்கது.