அஜித்தைக் கவர்ந்த ‘நானும் ரௌடிதான்’… விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!

Webdunia
சனி, 14 மே 2022 (16:20 IST)
விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதற்கான திரைக்கதை வேலைகளில் இப்போது ஈடுபட்டு வருகிறார்.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் விக்னேஷ் அஜித் 62 படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அஜித் படம் இயக்குவது, அவருடனான சந்திப்பு குறித்து பேசியுள்ளார். அதில் “என்னுடைய நானும் ரௌடிதான் திரைப்படம் அஜித் சாருக்கு மிகவும் பிடித்ததாக அவரின் மேனேஜர் கூறினார். அஜித்தை ஓரிரு முறை இதற்கு முன்னர் சந்தித்திருக்கிறேன். அப்போதே எதிர்காலத்தில் நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம் எனக் கூறினார். சொன்னதை இப்போது செய்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்