மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (14:13 IST)
அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.

இந்நிலையில் அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. இந்நிலையில் ஜனவரி இறுதிவரை அஜர்பைஜானில் நடக்க இருந்த விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு இப்போது சென்னை வந்த படக்குழு இப்போது மீண்டும் அஜர்பைஜானுக்கு கிளம்பியுள்ளது.

இன்று அஜித்தும் அஜர்பைஜானுக்கு கிளம்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அங்கு ஒரு மாதம் ஷூட்டிங் நடக்கும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்