விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஸர்பைஜான் கிளம்பிய அஜித்!

vinoth
வியாழன், 20 ஜூன் 2024 (16:49 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால் அஜித் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார்.  இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ள நிலையில் அஜித், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம்.

இந்நிலையில் படக்குழுவினர் ஏற்கனவே அஸர்பைஜானுக்கு சென்றுவிட்ட நிலையில் இன்று அஜித் கிளம்பியுள்ளார். அவர் விமான நிலையத்தில் ரசிகர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, இந்த தகவலை உறுதிப் படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்