ஒரே ஒரு அப்டேட்தான் கொடுப்பேன், எல்லாத்தையும் கேக்காதீங்க- விடாமுயற்சி குறித்து அர்ஜுன்!

vinoth

திங்கள், 17 ஜூன் 2024 (06:55 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால் அஜித் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார்.  இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ள நிலையில் அஜித், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம்.

அஜித் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே இருந்த சம்பள பாக்கி பிரச்சனையும் இப்போது தீர்க்கப்பட்டுள்ள நிலையில் ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அர்ஜுன் “இன்னு 30 சதவீத ஷூட்டிங் மட்டுமே மீதமுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித்துக்கும் அவருக்கும் இடையிலான காட்சி ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு “எல்லாத்தையும் இப்பொதே சொல்லிவிடுவார்களா?” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்