இந்திய சினிமாவின் தூண்களில் ஒருவர் காலமானார். கமல் இரங்கல்

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (21:07 IST)
இந்திய சினிமாவின் தூண்களில் ஒருவரும் பிரபல தயாரிப்பாளர், இயக்குனருமான தாசரி நாராயணராவ் சற்று முன்னர் காலமானார். தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த இவரது மறைவு திரைத்துறைக்கு ஒரு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.



 


இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவர் தாசரி நாராயணராவ் அவர்கள்தான். இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது. அதுமட்டுமின்றி 50-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தும், 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியும் உள்ளார்.

இவரது படங்கள் பெரும்பாலானவை சமூக அநீதி, ஊழல், பாலின பாகுபாடு குறித்து பேசும் படங்களாக இருந்தது. தேசிய விருது, நந்தி விருது, தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதுகளைப் பெற்றுள்ள் இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாசரி நாராயணராவ் மறைவுக்கு கமல்ஹாசன் உள்பட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்