கோட் படத்தைக் கலாய்த்த ரசிகருக்கு நக்கலான பதிலை அளித்த வெங்கட்பிரபு!

vinoth
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (14:31 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவை டேக் செய்து ரசிகர் ஒருவர் “எஸ் ஏ சந்திரசேகரின் மகன், தியாகராஜனின் மகன், இளையராஜாவின் மகன், கங்கை அமரனின் மகன்கள், கல்பாத்தி அகோரம் பொண்ணு இணைந்து மிரட்டும் கோட்” என நக்கல் செய்ய அவருக்கு பதிலளித்த வெங்கட்பிரபு “தேங்ஸ் ப்ரோ, உங்க அப்பா பேர் சொல்லுங்க அவருக்கும் நன்றி சொல்லிடலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்