விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று வீரமே வாகை சூடும் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது. இந்த படத்தை சரவணன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்துவரும் இந்த படத்தின் இந்த படம் விஷாலின் 31வது வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கவின்ராஜ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது
இந்த நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என விஷால் அறிவித்துள்ளார்
விஷால் ஏற்கனவே எனிமி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் துப்பறிவாளன் 2 என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே