பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெயம் ரவி!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (07:17 IST)
தமிழ் திரை உலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம்ரவி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
கடந்த 2003ஆம் ஆண்டு ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி அதன்பின்னர் எம் குமரன், தாஸ், மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் 
 
மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை என்ற திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கை திருப்பி போட்டது என்று கூறலாம். இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் ராஜராஜ சோழன் என்ற கேரக்டரில் நடித்து வரும் ஜெயம் ரவி இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று ஜெயம் ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு வெப்துனியா சார்பில் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்