SK இல்லாமல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2... ??

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (14:10 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி என அப்படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். 
 
சிவகார்த்திகேயனின் சந்தை மதிப்பை நிலைநாட்டிய படங்களில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்துக்கு முதன்மையான இடம் உண்டு. இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் அளித்த நேர்காணலில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே கூடாது என கூறியுள்ளார்.
 
ஆனால் இப்படத்தின் இயக்குனர் பொன்ராம்,  வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார். எனவே அவரை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது. எனவே அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்