சிவகார்த்திகேயனின் அடுத்த படம் எது? டான் vs அயலான்!

வெள்ளி, 8 அக்டோபர் 2021 (09:30 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டாக்டர் படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து அவரின் லைன் அப்பில் டான் மற்றும் அயலான் ஆகிய படங்கள் உள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

பட்ஜெட் மற்றும் கொரோனா பாதிப்பால் இந்த படம் பாதிக்கப்பட்டு இப்போது ஷூட்டிங் முடிந்து கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலிஸுக்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் மற்றொரு படமான டான் ரிலிஸாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்