ப்ளீஸ் விராட் கோலி போட்டோவை எனக்கு அனுப்பாதீங்க - வருத்தத்தில் பிகில் நடிகை!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (09:46 IST)
96 படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக நடித்து  பிரபலம் ஆனவர் வர்ஷா பொல்லம்மா.இவர் தொடர்ந்து பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியில் ஒருவராக நடித்து பெரும் புகழ் பெற்றார். அத்துடன் சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் சீமத்துரை படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் " ப்ளீஸ்.. விராட் கோலியின் லேட்டஸ்ட் போஸ்ட்டை எனக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்" என்று கவலையுடன் பதிவிட்டுள்ளார்.

காரணம், வர்ஷாவிற்கு  விராட் கோலி மீது சின்ன வயதில் இருந்தே கிரஷ். அண்மையில் கூட உங்களுடைய கிரஷ் யார் என்று கேட்டதற்கு " தனக்கு ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே விராட் கோலி மீது தான் கிரஷ். ஐ லவ் யூ கோலி என்று கூறி அவரது ஜெர்சியை வரைந்த போட்டோவை பதிவிட்டிருந்தார். தற்ப்போது கோலி மனைவி  அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை அறிவித்ததால் எல்லோரும் வர்ஷாவை வேடிக்கையாக வெறுப்பேற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்