கேப்டன் எப்படி இருக்கனும் ? கோலியை சூசகமாக சாடிய ரோஹ்த் சர்மா…

புதன், 5 ஆகஸ்ட் 2020 (17:27 IST)
இந்திய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா. சிறந்த பேட்ஸ் மேனாக கருதப்படுகிறார். இவர், அணியின் கேப்டன் என்பவர் தனக்கென தனித்துவமாக கோட்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேபடன் விராத் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்க்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஊடகஙக்ள் செய்திகளை வெளியிட்டன.

ஆனால் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போன்ற தகவல்களும் வெளியானது.

இந்த நிலையில்,  ரோஹித் சர்மா ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில், அண்யின் கேப்டன் என்பவர் தனக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மைதானத்தில் விளையாடும்போது, கோபம் வரும் ஆனால் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் சக வீரர்களிடம் ந்ம் கோபத்தைக் காட்டக்கூடாது எந்த் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி முதலில் ஆக்ரோஷமாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்