வசூலை அள்ளியது யார்? துணிவா? வாரிசா? – முழு கலெக்‌ஷன் ரிப்போர்ட்!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (12:44 IST)
நீண்ட ஆண்டுகள் கழித்து அஜித், விஜய் படங்களான துணிவு, வாரிசு ஒரே நாளில் வெளியாகியுள்ள நிலையில் அதன் கலெக்‌ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் நேற்று ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்டுள்ளன. விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு படங்களும் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் எந்த படம் அதிகம் வசூல் செய்தது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை துணிவு ஒரு நாளில் ரூ.3.75 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் வாரிசு ரூ.3.95 கோடி வசூல் செய்துள்ளது. அதேசமயம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் துணிவு ரூ.19 கோடி வசூலித்துள்ளது. ஆனால் வாரிசு ரூ.17 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

உலக அளவில் முதல் நாள் ஒட்டுமொத்த வசூலில் வாரிசு ரூ.26.5 கோடி வசூலித்துள்ளது. நூலிழையில் முதல் இடத்தை நழுவ விட்ட துணிவு ரூ.26 கோடி வசூலுடன் அடுத்த இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த நாள்களில் இந்த வசூல் நிலவரம் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கே வெளியான நிலையில் வாரிசு அதிகாலை 4 மணிக்குதான் வெளியானது. அதனால் துணிவுக்கு ஒரு காட்சி கூடுதலாக கிடைத்ததன் காரணமாக தமிழ்நாட்டில் அதன் வசூல் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்