நடிகர் விஜய்யிடம் உதவி கேட்ட பெண்! – ஓடி சென்று உதவிய விஜய் ரசிகர்கள்!

வியாழன், 12 ஜனவரி 2023 (12:03 IST)
தீக்காயமடைந்த தனது மகளுக்கு சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு விஜய் ரசிகை ஒருவர் விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பணம் அளித்து உதவியுள்ளனர்.

நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் நேற்று வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு பல திரையரங்குகளில் டிக்கெட் முழுவதும் புக்கிங் ஆகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் தீக்காயமடைந்த தனது மகளுக்கு சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுவதால் நடிகர் விஜய் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது வாரிசு வெளியாகியுள்ள நிலையில் சிலர் அந்த வீடியோவை மீண்டும் ஷேர் செய்து அந்த பெண்ணுக்கு விஜய் உதவினாரா என கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் ரூ.50 ஆயிரத்தை சிறுமியின் தீக்காய சிகிச்சைகளுக்காக அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரசிகையின் கோரிக்கையை நிறைவேற்றிய விஜய் ரசிகர்களுக்கு சக ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்