காக்கா கறி சாப்பிட்ட வனிதா? கடுப்பாகி போட்ட பதிவு!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (18:41 IST)
சர்சைக்குரியவராக சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை வனிதா விஜயகுமார். விஜயகுமார் வீட்டு வாரிசாக இருந்தும் அந்த குடும்பத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். இதனிடையே திருமண சர்ச்சைகளில் சிக்கி கிண்டலுக்கும், விமர்சனத்திற்கும் ஆளானார். 
 
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். கூடவே திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள kfc சிக்கன் கடையில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு கடுப்பாகி பதிவிட்டுள்ளார். அதில்,  இப்படி பிராண்ட் கடையில் மிகவும் சின்னதாக சிக்கன் கொடுத்து ஏமாற்றுவதாக கூறியுள்ளார். அதோடு இது  'இது கோழியா, இல்லை காக்காவா' என கேள்வி கேட்டிருக்கிறார். இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்