வனிதா பெயரில் போலி யூடியூப் - முதல்வர், பிரதமர் கவனத்திற்கு சென்ற ட்விட்!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (15:38 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சொத்து பிரச்னையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரியவந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து சொந்தமாக வனிதா புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அந்த சேனல் மிக குறுகிய காலத்தில் பெரும் பேமஸ் ஆனது. இந்நிலையில் தற்ப்போது வனிதாவின் சேனல் பெயரிலே போலியான சேனல் ஒன்று துவங்கிருப்பதை குறித்து ட்விட் பதிவு செய்து யூடியூப் நிறுவனம் இது போன்ற மோசடிகளை கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி சைபர் கிரைம், பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு டேக் செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்